Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், திருப்பூர், மதுரை, விருதுநகர், தேனி, ஈரோடு, தூத்துக்குடி, நீலகிரி, செங்கல்பட்டு, சிவகங்கை, கோவை, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சாவூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

இதனையடுத்து வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் கனமழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், தேனி, பெரம்பலூர் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு செப்டம்பர் 2-ம் தேதி தமிழகத்தில் உள்ள திருச்சி,‌ திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி போன்ற பகுதிகளில் ஓரிரு படங்களில் லேசான மற்றும் கனமழையும், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து செப்டம்பர் 3 மற்றும் 4-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், தேனி, திருப்பூர், மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிக கனமழையும், புதுவை மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் லேசான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்த வரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மேலும் செப்டம்பர் 1, 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதி, கேரள மற்றும் கர்நாடகா கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் கிழக்கு கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Categories

Tech |