தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தேனி, வட உள்மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மே 30, 31 ஜூன் 1-இல் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் ஜூன் 2ல் தமிழக கடலோர மாவட்டங்கள், நீலகிரி, கோவை, தேனியில் இடி மின்னலுடன் மழை வாய்ப்புள்ளதாகவும், திருவண்ணாமலை, வேலூரில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.