Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

கோவை, நீலகிரி மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது,  தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 4, 5, 6-ம் தேதிகளில் இப்பகுதிகள் மட்டுமின்றி அனைத்து கடலோர மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்று கூறிஉள்ளார்.

Categories

Tech |