சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாளை ( 10.02.2022 ) தென் தமிழக மாவட்டங்கள் தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், புதுவை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும். அதேபோல் பெரும்பாலும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
நாளை மறுநாள் ( 11.02.2022 ) தென் தமிழக மாவட்டங்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், காரைக்கால், திருப்பூர், நீலகிரி, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பெரும்பாலும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
12.02.2022 தென் தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும். பெரும்பாலும் மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். 13.02.2022 திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், தென்காசி, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும். பெரும்பாலும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
அதேபோல் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு எதுவும் இல்லை. அதேபோல் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.