காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எடுத்து தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஐந்து மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுத்துள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, தேனி,நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வெளியே செல்லும்போது குடை உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லவும். மழைக்காலம் என்பதால் தண்ணீர் சுட வைத்து குடிக்க நிறுத்தப்பட்டுள்ளது.