தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுவை, காரைக்கால், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சிவகங்கை, தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் கனமழை பெய்யும். அதன் பிறகு ஆகஸ்ட் 2-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் கனமழை பெய்யும்.
இதனையடுத்து ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி மதுரை மற்றும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் கன மழை பெய்யும். இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 4-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் கனமழை பெய்யும். மேலும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால், கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் கனமழை பெய்யும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு ஓரிரு இடங்களில் லேசான மற்றும் கனமழை பெய்யும்.