Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் இன்று சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும்,  சென்னையில் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்தலூரில் 5, சின்னக்கல்லார், இரணியல், பேச்சிப்பாறை உள்ளிட்ட இடங்களில் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Categories

Tech |