Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இனிவரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந் நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், திருச்சி, குமரி, புதுவை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் நாளை முதல் ஏப்ரல் ஆறாம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |