Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் வாபஸ்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த நான்கு நாட்களாக அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலார்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும். கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.

தமிழக கடலோரப் பகுதிகள் குமரி கடல்,அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மத்திய அரபிக்கடல் வடக்கு ஆந்திர கடல் பகுதிகளுக்கு நாளை முதல் ஆகஸ்ட் எட்டாம் தேதி வரை செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |