Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நாளை பிரதமருடன் முதல்வர் முக்கிய ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்த நிலையில், நாளை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |