தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்கள் அனைவரும் தங்களது படிப்பை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களின் நிலைமை சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு காரணமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக யுனிசெப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக நிறைய புகார்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்களை நடத்தும் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.