Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. இவர்களுக்கு விடுமுறையா…? அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால்  தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அடுத்த சில வாரங்கள் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் மற்றும் முக்கியம். கூட்டமான இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு கொரோனா அதிகரித்து வருவதால் நோய்த்தடுப்பு விதிகளை கடைபிடிக்க அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. விடுதி மாணவர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர்களை வீடுகளுக்கு அனுப்பவோ, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவோ கூடாது. மாணவர்கள் அச்சம் அடைய தேவையில்லை. மாணவர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |