தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பணி செய்யும் இடங்கள், திருவிழாக்கள், கூட்டங்களில் பங்கேற்கும் ஒரு சிலருக்கு தொற்று உறுதியானால் அனைவரையும் பரிசோதனை செய்து கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பரிசோதனைகள், தொடர் கண்காணிப்பு, சிகிச்சை , தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்