Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிரடி விலை உயர்வு…. மத்திய அரசுக்கு தலைமை செயலாளர் எழுதிய அவசர கடிதம்….!!!!

இந்தியாவிலும் ஜவுளித் துறையின் பங்கு மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டும் அல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு அடிப்படையாக நூல் விளங்குகிறது. அதன் விலை கட்டுக்குள் இருந்தால் தான் ஜவுளித் தொழில் சீரான முறையில் நடைபெறும். ஆனால் கடந்த சில நாட்களாக நூல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு தொழில் துறை அமைப்பினரும் முக் கிய கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அதாவது நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் மத்திய ஜவுளித் துறை செயலாளர் உபேந்திர பிரசாந்த் சிங்கிற்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 19 சதவீதமாக இருக்கிறது. 45% நூற்பாலைகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. இதில் 31 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஒரு கிலோ நூல் விலை 210 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 340 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் பருத்தி, பஞ்சு பதுக்கல் காரணமாக நூல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே நேரடி பருத்தி கொள்முதல் உச்சவரம்பை இந்திய பருத்தி கழகம் நிர்ணயம் செய்ய வேண்டும். இதில் மத்திய அரசு நேரடியாக தலையிட்டு ஒட்டுமொத்த ஜவுளித் தொழிலை பாதுகாக்கும் வகையில் நூல் விலை உயர்வை கட்டுக்குள் வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைவில் நூல் விலை கட்டுக்குள் வரும் என்று ஜவுளித் துறையினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Categories

Tech |