தமிழகத்தில் இன்று அதிதீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிதீவிர கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.
அதுமட்டுமன்றி தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.