தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உண்டாக்கியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி ஆகிய 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.