தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்கள் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி வரலாறு காணாத அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.
இன்று மீண்டும் விலை உயர்ந்த நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பெட்ரோல் மட்டுமின்றி டீசல் விலையும் உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.