தமிழக முதல்வர் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நிதித்துறை, முதல்வரின் முகவரி, வளர்ச்சித் துறை, சட்டத்துறை மற்றும் திட்டம், பொதுத்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை, இளைஞர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தத் துறைகளில் அரசின் நலத் திட்டங்கள் குறித்தும், புதிய அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின் புதிதாக தொடங்கவுள்ள 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்குவது, அரசு கல்லூரிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புதல், மாணவ- மாணவிகளுக்கு விடுதி கட்டுதல் போன்ற பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் துறை சார்பில் 6 வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் குறையைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் முதல்வர் கூறியுள்ளார். அதன்பிறகு மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துமாறும், இலங்கை தமிழர் முகாம்களில் நடைபெற்று வரும் வீடு கட்டும் பணிகளை துரிதமாக முடிக்கு மாறும், குறைதீர்ப்பு மேலாண்மை கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.