தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்ற கோப்பில் முதல்வர் மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு காலை ஆளுநர் காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின் இன்று தலைமை செயலகத்திற்கு மு.கஸ்டாலின் வருகை தந்தார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முகஸ்டாலின் முதன்முறையாக தலைமைச் செயலகம் வருகை தந்தார்.
அப்போது அவருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் விருது வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பல முக்கிய ஆவணங்களில் அவர் கையெழுத்திட்டார். முதலாவதாக கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ.4000 நிதியுதவி, ஆவின் பால்விலை லிட்டருக்கு ரூ3 குறைப்பு உள்ளிட்ட கோப்புகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.