Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும்… அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்படும் மக்கள் அனைவருக்கும் அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

மேலும் புயல் கரையை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை மற்றும் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நடமாடும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |