தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தியேட்டர் மற்றும் உணவகங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.