தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தட்டச்சு பயிற்சி நிலையங்களை மூட தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தட்டச்சு பாட தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ், பயிற்சி வகுப்புகள் அரசு உத்தரவுப்படி, 25 நாட்களில் முடித்து வைக்கப்படும். தேர்வு கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.