Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து துறை செயலாளர்களுடன்…. தலைமைச் செயலாளர் திடீர் ஆலோசனை….!!!!

தமிழகத்தில் அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொது பட்ஜெட்டும், வேளாண் பட்ஜெட்டும் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த இந்த கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் வெளியிட்டனர்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், பேரவைச் செயலாளர் சீனிவாசன், உள்துறைச் செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து துறை செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |