தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட வகுப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது 90% பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதனையடுத்து கடந்த ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வந்தது. இன்று முதல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி மாணவர்கள் அனைவருக்கும் பாட வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.