Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக அனைத்து பள்ளிகளும் படிப்படியாக திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உருமாறிய கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வகையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது உலகின் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

அதனால் அனைத்து நாடுகளிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அளிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வெப்பநிலை பரிசோதனை, கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுதல், தனிமனித இடைவெளி, பள்ளிகளை சுத்தம் செய்தல் மற்றும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை முறையாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் என்சிசி, என் எஸ் எஸ், விளையாட்டு, இறைவணக்க கூட்டம் மற்றும் கலாச்சார கூட்டம் உள்ளிட்ட அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் கடைபிடிக்குமாறு பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |