தமிழகத்தில் இளம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் அத்து மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்து வந்தாலும் இதுபோன்ற குற்றங்கள் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை அளிக்க அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மாணவிகளுக்கான பாலியல் தொல்லைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.