தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடபுத்தகங்கள் விரைந்து வழங்கி ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தற்போது ஊரடங்கு காரணமாக மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது தாமதமாகிறது. இதனால் தாமதமின்றி புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்து விரைந்து பாடங்களை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.