தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பள்ளி வாகனங்களில் முன்னும் பின்னும் கேமராக்கள் பொருத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட உடன் முழுமையாக இவை கண்காணிக்கப்படும். பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாற்றாக இ-டிக்கெட் வழங்கும் முறை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம் தமிழகத்தில் செயல்பாட்டிற்கு வந்த பிறகு கூகுள் பெயர் மற்றும் மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளைப் பயன்படுத்தி பயணிகள் டிக்கெட் பெற்றுக்கொள்ள முடியும். தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்யலாம். பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் முடிவடைந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணம் செய்வதற்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.