Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் சிற்றுண்டி தயாரிப்பதற்கான வழிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.அதன்படி தயார் செய்யப்பட்ட உணவை குழந்தைகளுக்கு வழங்கும் முன்பு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அதை சாப்பிட்டு பார்க்க வேண்டும். மசாலா பொருட்கள் தரமாக இருக்க வேண்டும்.ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. மூலப் பொருட்கள் இயல்பான மணம், நிறம் உடையதாகவும் வெளிப்பொருட்கள் கலக்காமலும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |