Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்…. இந்த கிழமையில்….. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா அச்சுறுத்தி வந்தது. இதன் தாக்கம் தற்போது குறைந்ததால் மக்களும் நிம்மதியாக இருக்கிறார்கள். தற்போது தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் புதன்கிழமை தடுப்பூசி போடப்படும். அதன் பிறகு 60 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் திட்டம் தொடருமா? என்பது விரைவில் தெரியவரும்.

அக்டோபர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார். இன்புளுயன்சா காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தேவையில்லை. இது பருவ காலத்தில் வரும் காய்ச்சல் என்பதால் மக்கள் பீதி அடைய தேவை இல்லை. மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகம் கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை தொடர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்

Categories

Tech |