தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. கொரோனா காரணமாக திறக்கப்படாமல் இருந்த பள்ளிகள் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது .அதன்படி 50% என்ற வகையில் சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும், ஊழியர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் அனைத்து பள்ளிகளிலும் தூய்மையான நிகழ்வுகள் 2021 என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி செப்டம்பர் 1 முதல் 15 வரை சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 – தூய்மை உறுதிமொழி தினம்
செப்டம்பர் 2 – தூய்மை விழிப்புணர்வு தினம்
செப்டம்பர் 3 – சமூக விழிப்புணர்வு தினம்
செப்டம்பர் 4, 5 – பசுமைப் பள்ளி இயக்க நாட்கள்
செப்டம்பர் 6, 7 – தூய்மை நிகழ்வுகளில் பங்கேற்றல்
செப்டம்பர் 8 – கைகழுவுதல் தினம்
செப்டம்பர் 9, 10 – தன் சுத்தம் மற்றும் சுகாதாரம்
செப்டம்பர் 11, 12 – தூய்மை நிகழ்வு கண்காட்சிகள்
செப்டம்பர் 15 – பரிசுகள் வழங்குதல்