தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகளில் சில வாரங்களுக்கு முன்பு தான் செமஸ்டர் தேர்வு முடிந்தது. அந்த சமயத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் அனைத்து தேர்வுகளும் ஆன்லைனில் வைக்கப்பட்டது. குறிப்பாக, பொறியியல் தேர்வுகளும் ஆன்லைனில் தான் நடத்தப்பட்டது. ஆனால் இறுதியாண்டு மாணவர்கள் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று நேரடி தேர்வு முறையில் எழுத உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகம் தற்போது சாதாரண நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. எனவே தமிழகத்தில் பல கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் AICTE பொறியியல் கல்லூரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி கல்லூரி தொடர்பான அனைத்து விவரங்களையும் பொறியியல் கல்லூரிகள் இணையதளத்தில் புதுப்பிக்க AICTE உத்தரவிட்டுள்ளது. அங்கீகாரம், கல்வி கட்டணம், உள்கட்டமைப்பு போன்ற விவரங்களை இணையதளத்தில் அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும் என்று அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.