Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மருத்துவக் கிடங்குகளிலும்…. இன்னும் 10 நாள்களுக்குள்…. அதிரடி…

தமிழகம் முழுவதும் எந்த மருந்து தட்டுப்பாடும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சில தினங்களாகவே தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கும் மருந்துகள் இருப்பில் இல்லை எனவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுபற்றி அவர், “தமிழகத்தில் 32 இடங்களில் உள்ள தலைமை மருந்து கிடங்குகளில் எந்தெந்த மருந்துகள் எவ்வளவு நாள்களுக்கு இருப்பு உள்ளது என்பதை தகவல் பலகை மூலம் அறிவிப்பாக வெளியிடப்படும். இன்னும் 10 நாள்களுக்குள் அனைத்து மருத்துவக் கிடங்குகளிலும் அறிவிப்பு பலகை வைக்கப்படும். 5 மாவட்டங்களில் மருந்து கிடங்குகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.

Categories

Tech |