Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருவதால் டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் இருப்பு உறுதி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெங்கு காய்ச்சல் தலை துாக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் சளி, காய்ச்சல், இருமலுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பில் வைக்கவும், தேவைக்கேற்ற அளவில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் தொடர் மழை காரணமாக டெங்கு, சிக்குன்குனியா பரவ வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அதிகரிக்க கூடும். எனவே  தேவையான மருந்து போதிய அளவில் இருப்பில் உள்ளது’ என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |