தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் அடிப்படை சேவைகளில் மக்கள் குறைகளை ஒவ்வொரு வரும் திங்கட்கிழமை அன்று “மக்கள் குறைதீர்க்கும் நாள்” என்று கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் அந்தந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் மாதத்தில் ஒரு நாள் ஒரு கிராமத்தில் நேரடியாக சென்று முகாமிடுவார்கள். அப்போது மக்கள் தங்கள் குறைகளை அவர்களிடம் நேரடியாக தெரிவிக்கலாம்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களின் ஆட்சியர்கள் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.