Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்ட மக்களுக்கும்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் மேலும் 366 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 366 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். 1,013 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 34,49,373 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டு மொத்த உயிரிழப்பானது 38,003 ஆக அதிகரித்துள்ளது. இதில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் 100-க்கும் கீழாகவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |