தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு நெல் அறுவடை அதிகரிக்கும் என்பதால் நேரடி கொள்முதல் நிலையங்களை அதிகம் தொடங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் நுகர்ப்பொருள் வாணிப கழகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக 100 கிலோ உடைய குவிண்டால் அடிப்படையில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். பின்னர் அந்த நெல் அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
இந்நிலையில் ஜனவரியில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு நெல் அறுவடை முழு வீச்சில் மேற்கொள்ளப்படும் என்பதால் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்ப தஞ்சை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் டெல்டா அல்லாத நெல் விளைச்சல் அதிகம் உள்ள மாவட்டங்களிலும் நேரடி கொள்முதல் நிலையங்களை அதிகம் தொடங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.