தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு முறையாக சென்றடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பராமரிக்க வேண்டிய அறிவிப்பு பலகை வைப்பது தொடர்பாக அனைத்து ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு வேலை நேரம் போன்றவற்றை மக்கள் அறியும்படி தகவல் பலகை வைக்க வேண்டுமென்றும், ரேஷன் கடைகள் தொடர்பாக 044-25671427, 25672224 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.