உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு மற்றும் முக கவசம் என பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருவதால்தமிழகத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் விரைவில் ஆலோசனை செய்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடு, கட்டாயம் முக கவசம் மற்றும் முக கவசம் அணியாவிட்டால் அபராதம்,திரையரங்கு மற்றும் விளையாட்டு அரங்கங்களில் கட்டுப்பாடு விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.