Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அமைச்சு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு… பள்ளிக்கல்வி இணை இயக்குனர் புதிய உத்தரவு…!!!!!!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும்  அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் கடந்த 2020 ஆம் வருடம் நடைபெற்ற துறை தேர்வான சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு பாகம் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் முன் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதனால் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை கூறி பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கின்றார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் தட்டச்சர்கள் கடந்த 2020 வருடம் நடைபெற்ற துறைத்தேர்வான சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு பாகம் ஒன்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன் ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இதற்கு இவர்கள் தேர்வில் எழுதியதற்கான தேர்வு கூட நுழைவு சீட்டு மற்றும் தேர்வு பெற்றதற்கான அரசிதழ் அறிக்கையின் நகல்கள் தேர்ச்சி பெற்ற விவரங்கள் பணி பதிவேட்டின் முதல் பக்க நகல் போன்ற தகவல்களை உடனடியாக அனுப்ப வேண்டும் மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் அரசுக்கு பரிசீலனை மேற்கொள்ள தேவைப்படுவதால் விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் துரிதமாக செயல்பட்டு வருகின்ற ஒன்பதாம் தேதிக்குள் இணை இயக்குனர் பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். அத்துடன் மேற்கண்ட விவரங்களை தவிர்த்து கூடுதல் விவரங்கள் அனுப்பினால் அந்த விவரங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |