Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசாணை 101 மற்றும் 108 ரத்து செய்யப்டுகிறதா….? வெளியான முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் அரசாணை 101 மற்றும் 108-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலினை கடந்த 2-ம் தேதி சந்தித்தனர். இவர்கள் முதல்வரிடம் அரசாணை 101 மற்றும் 108 ரத்து உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். இந்த அரசாணைகளால் ஆசிரியர்களின் நலன் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதன் பிறகு மீண்டும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பணியிடத்தை கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அரசாணை 101 மற்றும் 108 ரத்து செய்யப்பட்டால் வரப்போகும் புதிய மாற்றங்கள் குறித்த சில விவரங்களை பார்க்கலாம். அதன்படி முதன்மை கல்வி அலுவலர்கள் பார்வை செயலாளர்களாக மட்டும் செயல்படுவார்கள்.

இதனையடுத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளை வட்டார கல்வி அலுவலர்களின் உதவியோடு சரி செய்து வைப்பார். இவர்களுக்கு உயர் அதிகாரியாக தொடக்க கல்வி இயக்குனர் செயல்படுவார். அதன் பிறகு மெட்ரிக் பள்ளியை கண்காணிக்கும் மாவட்ட கல்வி கண்காணிப்பாளர்களுக்கு ஒரு உதவியாளர், ஒரு டைப்பிஸ்ட் மற்றும் ஒரு ஜூனியர் அசிஸ்டன்ட் நியமிக்கப்படுவார்கள்.

இதைத்தொடர்ந்து வட்டார கல்வி அலுவலகங்களில் ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர், ஒரு ஜூனியர் அசிஸ்டன்ட் மற்றும் ஒரு டைப்பிஸ்ட் போன்ற புதிய பதவிகள் உருவாக்கப்படும். தலைமை ஆசிரியர்கள் மீதான கண்காணிப்பு பணிகள் நீக்கப்படுவதோடு, கூடுதலாக 3 இணை இயக்குனர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளுக்கு ஏற்ப 2 மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். இது போன்ற பல்வேறு நடைமுறைகள் அரசாணை ரத்து செய்யப்பட்டால் நடைமுறைக்கு வரும்.

Categories

Tech |