Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்கள்‌ சேர்க்கை அதிகரித்துள்ளதால்‌, ஆசிரியர்களுக்கு மேலும்‌ ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசு பள்ளிகளில்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில்‌, விருப்ப இடமாறுதல்‌, பணி நிரவலுக்கான இணைய கவுன்சிலிங்‌, மூன்று மாதங்களுக்கு முன்‌ நடத்தப்பட்டது. அதன்படி, மூவாயிரம் ஆசிரியர்கள்‌ கூடுதல்‌ இடங்களில்‌ பதவியேற்றனர்‌.
இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம்‌ நிறுத்தப்பட்டிருந்தது. அரசாணை இல்லாமல்‌, புதிய இடங்களுக்கு சம்பளம்‌ வழங்க முடியாது என்று நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்‌ துறை சார்பில்‌ பணி நீட்டிப்பிற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ மற்றும்‌ இதர படிகளை வழங்கிடவும்‌ பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |