தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் தற்போது உரையாற்றி வருகிறார். அதில், “அரசு ஊழியர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான். நான் உங்களில் ஒருவனாக இருப்பேன். நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன். அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை. அதிகம் பேசமாட்டேன்; செயலில்தான் காட்டுவேன்.
அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளேன். நீங்கள் அரசு ஊழியர். நான் மக்களின் ஊழியன். உங்களுக்கும், எனக்கும் இது தான் வித்தியாசம். போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று பேசியுள்ளார்.