தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 ஆக இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து ஓய்வு பெறும் வயது 59 இருந்து 60 ஆக உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தது. ஏற்கனவே தமிழகத்தில் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பக்கத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பணியில் உள்ள ஊழியர்கள் ஓய்வு பெற்றால் தான் இளைஞர்கள் மற்றும் அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு வேலை கிடைக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் திமுக தலைமையிலான அரசு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் நேற்று 25,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அதில் சென்னை தலைமைச் செயலகத்தில் 46 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கூட்டுறவுத்துறையில் 56, மருத்துவத்துறையில் 115, பொது சுகாதாரத் துறையில் 87, வேளாண்துறையில் 34 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். மேலும் கால்நடை பராமரிப்பு துறையில் 15 பேர் என்று மொத்தம் 7,000 பேர் வரை நேற்று தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த மாதத்தில் மட்டும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என மொத்தம் 25,000 பேர் ஓய்வு பெற உள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணை தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரே மாதத்தில் அதிக அளவு ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் அரசுகளுக்கு ஓய்வூதிய பலன்கள் அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. இதனால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டு உள்ளது. மேலும் வரும் காலங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.