கொரோனா தொற்று பாதிப்பால் பொது முடக்கம் ஏற்பட்டு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டன. வேலையில்லாமல் வருவாய் இழப்பு ஏற்பட்டன. வேலையின்றி வீடுகளில் முடங்கிய கூலி தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் தங்களின் குழந்தைகளை தொடர்ந்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க முடியாமல் மாற்று சான்றிதழை பெற்று அரசு, மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது ஆகிய காரணங்களால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது சுமார் 72 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.அரசு பள்ளியா? என்ற கேள்வி எழுப்பியவர்கள் தற்போது அரசு பள்ளிகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.4