Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை தொடர்ந்து 3-வது அலை பாதிப்பு நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கியது. இதன் காரணமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அந்த அடிப்படையில் பிப்.1 ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட்டது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஆனால் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது.

இதனிடையில் அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு பிப்..12ஆம் தேதி தெடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2021-22-ம் வருடத்துக்கான, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவதாக நேற்று (பிப்..15)அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான கால அட்டவணை முன்பே வெளியான நிலையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெறுவதாக இருந்த பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்து  உள்ளார். அதன்பின் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்களின் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு இன்று(பிப்..16) வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியது. இந்நிலையில் இன்று (பிப்.16) முதல் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது..

Categories

Tech |