Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளிகள் விபரங்கள்…. அதிருப்தியில் தலைமை ஆசிரியர்கள்…..!!!!!

எமிஸ் எனும் கல்வி மேலாண்மை தகவல் மையத்தில் மாநில அளவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி விபரங்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மாணவர்கள் பள்ளிக்கு வருகைதரும் நாட்களில் இருந்து மாணவர்கள் செய்யும் அனைத்து விஷயங்களும் அந்த பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. இந்தக் கல்வி மேலாண்மை தகவல் மையத்தில் ஆசிரியர்கள் அவ்வப்போது பதிவு செய்து கொண்டே உள்ளதால் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணியில் ஆர்வம் செலுத்த முடியாமல் ஆசிரியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இப்பணிச்சுமையை குறைக்க தனியாக வெப்சைட் ஒன்றை உருவாக்கிய எமிஸ்சில் பதிவு செய்வதைப் போன்று அந்த வெப்சைட்டிலும் பதிவு செய்யுமாறு ஒரு யோசனை முன்னிறுத்தப்பட்டது. இந்த வெப்சைட் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக அனைத்து மாணவர்களிடமும் வீதம் 2 ரூபாய் வசூலிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் இந்த எமிஸ் தகவல் மையத்தில் 10, 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் தேர்வு பட்டியலும் பதிவிடப்படும்.

இந்த எமிஸ் தகவல்கள் ஆசிரியர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் எந்த மாணவன் எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளார் என்பதை பகுத்து ஆய்வு மேற்கொள்ள மிகவும் உதவியாக இருந்து வருகிறது. அத்துடன் இந்த வெப்சைட் பராமரிப்புக்கு பி.டி.ஏ நிதியை செலவிட வேண்டும் என்றும் மாணவர்களிடம் வசூலிக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பே எமிஸ் தகவல் மையம் நடைமுறையில் இருக்கும் போது சீப் எஜூகேஷனல் ஆபீசர் பெயரில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டு அதிலும் பதிவேற்றம் செய்வதன் காரணமாக தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |