Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி…..!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் விதமாக பள்ளி ஆசிரியர்களுக்கு பல விதமான பயிற்சி வகுப்புகள் அவ்வபோது நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காலத்திற்குப் பிறகு மாணவர்களின் கற்றல் திறன் சற்று குறைந்துள்ளதால் மீண்டும் அவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

அதே சமயம் ஆசிரியர்களுக்கும் பலவிதமான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்போது தொடங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கு பல பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் நிலையில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஆங்கில பெயர்ச்சி தற்போது வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |