Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.2000…. நவம்பர் 13 கடைசி நாள்…. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவு மற்றும் திறன் அடிப்படையில் NTSE தேர்வு நடைபெறும். அந்த தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் போது மாதம் தோறும் 1250 ரூபாய் அந்த மாணவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதன்பிறகு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பிற்கு மாதம் 2000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும். முனைவர் படிப்பிற்கு பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்படும்.

தற்போது நடப்பு ஆண்டான 2021-2022 ஜனவரி மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அதற்கு அவர் அவர் படிக்கும் பள்ளியில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். இந்த விண்ணப்பங்களை www.dge.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் நவம்பர் 8 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதற்கு கட்டணத் தொகை 50 ரூபாய். ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு நவம்பர் 13ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. விண்ணப்பிக்க வரும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்க வரும் போது மாணவர்கள் ஜாதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.சாதி சான்றிதழ் சமர்ப்பிக்காமல் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் இது குறித்த விபரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

Categories

Tech |