Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு வந்த திடீர் சிக்கல்…. பெற்றோர்கள் அதிர்ச்சி….!!!!

மன்னார்குடியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆங்கில வழி கல்வி வகுப்புகள் எல்கேஜி முதல் 5-ஆம் வகுப்பு வரை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் இந்த பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அரசின் சட்ட விதிகளுக்கு முரணாக வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே பள்ளி செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே பெற்றோர்கள் தனியார் பள்ளியை விட அரசு பள்ளிகளில் கல்வி சிறப்பாக செயல்படுவதாக நம்பி தங்களுடைய பிள்ளைகளை சேர்த்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை உயரதிகாரிகள், முதல்வரின் தனிப்பிரிவு, பள்ளிக்கல்வி அமைச்சர் என பல தரப்பினருக்கும் புகார் மனு அளித்துள்ளனர்.

இருப்பினும் இதுவரை அரசு எந்தவிதமான நடவடிக்கையும் இந்த பள்ளி மீது எடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மன்னார்குடி அருகில் உள்ள மேலவாசல் பகுதியில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் தங்களது குழந்தைகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாவட்ட உதவி தொடக்க கல்வி துறையில் உள்ள அலுவலர்கள் சிலர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் ஒரு சில நாட்களில் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |